புலிகளின் ஆயுதக்கப்பலை தவறவிட்ட சிறிலங்கா கடற்படை: "சண்டே ரைம்ஸ்" 

26.01.2009

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின்படை நடவடிக்கையை தடுப்பதில்லை என்பதில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாக இருப்பதாக, அனைத்துலக செய்தி ஊடகமான றொயிற்றர்ஸ் (reuters) தகவல் வெளியிட்டுள்ளது.

"சிறீலங்காவால் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்களா?" என்ற தலைப்பில் வன்னியின் தற்போதைய நிலை பற்றியும், விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் C. Bryson Hull எழுதியுள்ள ஆய்வுப்பத்தியில், இலங்கை போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

 தமிழ்நாட்டில் எந்தவித அரசியல் அழுத்தம் எழுந்தாலும், மகிந்த சகோதரர்கள் முன்னெடுக்கும் போரை எந்தக் காரணம் கொண்டும் தடுப்பதில்லை என்ற தனது முடிவை இந்தியப் பிரதமர் மன்மோகன் தெளிவுபடுத்தி இருப்பதாகவும், ஆனால் தமிழ் மக்களிற்கான தீர்வு அரசியல் அடிப்படையில் காணப்பட வேண்டும் என மகிந்தவும், மன்மோகனும் உடன்பாடு கண்டிருப்பதாகவும் றொயிற்றர்ஸ் (reuters) கூறுகின்றது.

தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.கவின் தலைவரும், முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி, இந்திய மத்திய அரசுக்கு புதிய காலக்கெடு விதித்துள்ள போதிலும், இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு சிறீலங்கா அரசுக்கு ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு விட்டதை றொயிற்றர்சின்(reuters) இந்த தகவல் வெளிப்படுத்தி நிற்கின்றது.

இதனால் ஈழத்தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையைக் கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் புதிய பல திட்டங்களை வகுத்து, அவற்றிற்கு செயல்வடிவம் கொடுக்க தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என தமிழர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முகப்பு


ஈழம் 2008 அகவி