புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 750 படையினரை மீட்டுத்தருமாறு பெற்றோர் ஐ.சி.ஆர்.சியிடம் கோரிக்கை

09.02.2009

இலங்கை இராணுவத்தில் இருந்து காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், தமது  பிள்ளைகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தேடிப்பார்க்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். இராணுவ செய்தி ஊடகத்தினால், இவர்கள் விஸ்வமடு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டதையடுத்தே அவர்கள் இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்


''பழிவாங்கும் நேரம் இதுவல்ல'' கருணாநிதிக்கு கடிதம் எழுதும் புலிகள்? : விகடன்

07.01.2009

ஈழத்தமிழர்கள் பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு கடந்த மூன்றாம் தேதி கூட்டப்பட்டபோது, மத்திய அரசின் உச்சியைப் பிடித்து உலுக்கும்படியான முடிவை எடுப்பார்கள் என மொத்தத் தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

ஆனால், வழக்கம் போலவே புலிகளின் சகோதர யுத்தத்தைக் குத்திக்காட்டிய கையோடு, இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் தன் ஆதரவு உண்டு என்று காட்டுவதற்காக போராட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

மேலும்


'விடுதலைப்புலிகள் பலத்தை இழக்கவில்லை'- பா. நடேசன்

27.01.2009

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும்


மகிந்தவின் படை நடவடிக்கையை தடுப்பதில்லை - மன்மோகன் உறுதி

26.01.2009
சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின்படை நடவடிக்கையை தடுப்பதில்லை என்பதில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாக இருப்பதாக, அனைத்துலக செய்தி ஊடகமான றொயிற்றர்ஸ் (reuters) தகவல் வெளியிட்டுள்ளது.

"சிறீலங்காவால் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்களா?" என்ற தலைப்பில் வன்னியின் தற்போதைய நிலை பற்றியும், விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் C. Bryson Hull எழுதியுள்ள ஆய்வுப்பத்தியில், இலங்கை போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
 
மேலும்


இலங்கையில் ஜப்பான் தூதர்.

24.09.2009

அப்பாவி பொது மக்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று ஜப்பான் தூதர் யாசுஷி அகாஷி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதி ஏற்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கான ஜப்பான் அரசாங்கத்தின் தூதரான யாசுஷி அகாஷி இலங்கைக்கு 5 நாள் பயணமாக சென்றுள்ளார்.

மேலும்


பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் வெளியிட்ட கருத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது!

24.01.2009

ஈழத்தமிழர்களின் நிலை தொடர்பாக பிரதமரின் கருத்துக்கு முரண்பாடான பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் வெளியிட்ட கருத்துள்ளதாக பிரித்தானிய தமிழர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது!

பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் 21-01-2009ஆம் திகதியிட்டு வெளியிட்ட இந்த அறிக்கையில் ஸ்ரீலங்காஅரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலை தொடர்பான கண்டனம் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த அறிக்கை பிரித்தானிய பிரதமரின் நிலைப்பாட்டுடன் முற்றிலும் முரண்படுவதாகஉள்ளதை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

மேலும்


மட்டு நகர் குண்டு வெடிப்வில் 2 காவல்துறை பலி! காவல்துறையினர் உட்பட 11 பேர் காயம்

21.01.2009

மட்டக்களப்பு தலைமை காவல்துறை அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற குண்டு வெடிப்வில் 2 காவல்துறை பலி! காவல்துறையினர் உட்பட 11 பேர் காயம்  

இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் மட்டு

மேலும்


திருகோணமலையில் சிறிலங்கா ஊர்காவல் படையினரின் காவலரண் மீது புலிகள் தாக்குதல்: 3 பேர் பலி

18.01.2009

திருகோணமலை மாவட்டம் மல்லிகைத்தீவு பகுதியில் சிறிலங்கா ஊர்காவல் படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 3 ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

மேலும்


த‌மி‌ழ் ம‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு : ‌சிவச‌ங்க‌ர் மேன‌ன்

18.01.2009

த‌மி‌ழம‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கஏ‌ற்றவாறஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வஒ‌ன்றை‌ககாஇ‌‌‌ந்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்கு‌மஎ‌ன்றஅயலுறவு‌சசெயல‌ர் ‌சிவச‌ங்க‌ரமேன‌னஉறு‌திய‌ளி‌த்தா‌ர்.

தமிழ்ததேசியககூட்டமைப்பின் நாடாளுமன்றககுழுவசந்தித்தகலந்துரையாடியபோதசிவசங்கரமேனன் இவ்வாறதெரிவித்தார் எ‌ன்றபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது..

மேலும்


சாகும் வரை திருமாவளவன் உண்ணாவிரதம்

16.01.2009

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு உடனடியாக இந்திய அரசு தீர்வு காண வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், ஜன-15 அன்று முதல் சாகும்வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.




 

மேலும்


முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை 7 தடவைகள் குண்டுத்தாக்குதல்: 12 பேர் காயம்

13.01.2009

முல்லைத்தீவு பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று ஏழு தடவைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் இருவர் காயமடைந்துள்ளனர். 12 வீடுகள் சேதமாகின.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் 18 குண்டுகளை வீசியுள்ளன.

மேலும்


கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இடிந்த கட்டடங்கள்; நாய்களும் கால்நடைகளுமே அங்குள்ளன: அங்கு சென்று திரும்பிய செய்தியாளர்

06.01.2009

கிளிநொச்சியை சுற்றியுள்ள பகுதிகள் அச்சம் தரும் வகையில் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அங்கொன்றும் இங் கொன்றுமாகக் காணப்படும் கட்டடங்கள் ஷெல் வீச்சினால் முற்றிலுமாக சிதறடிக் கப்பட்டுள்ளன என இலங்கை இராணுவத்தால் ஞாயிற்றுக்கிழமை அங்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக ஏ.பி. செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

விடுதலைப் புலிகளின் முக்கிய நகரமாக விளங்கிய கிளிநொச்சியூடாகச் செல்லும் ஏ 9 பாதை முற்றாக வெறிச்சோடிக் காணப்படுகின்றது. சில நாய்கள், கால்நடைகளைத் தவிர வேறு எதனையும் அங்கு காணமுடியவில்லை.

மேலும்


வெள்ளைவான் ஆயுததாரிகளினால் குடும்பஸ்த்தர் ஒருவர் கடத்தல்

05.01.2009

திருகோணமலையில் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளினால் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


 


மேலும்


சிறிலங்கா இராணுவத்தை மிரள வைக்கும் புலிகளின் பாதுகாப்பு பதுங்கு குழிகள்

05.01.2009

கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாக அலுவலகங்களைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பங்கர்கள் (பதுங்கு குழிகள்) எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கக் கூடிய இரும்புக் கோட்டைகள் போல இருப்பதைப் பார்த்து இலங்கை இராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

மேலும்


இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு விடுதலைப் புலிகளை பின்வாங்கச் செய்திருப்பது பெரு வெற்றியல்ல வெட்கக்கேடு - திருமாவளவன்

03.01.2009

தமிழீழ விடுதலைப் புலிகளோடு தனியாக மோத வக்கில்லாத சிங்கள அரசு, இந்திய அரசு உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் துணையோடு, ஒற்றையாய் எதிர்த்து நிற்கும் விடுதலைப் புலிகளை பின்வாங்கச் செய்திருப்பது பெரிய வெற்றியாகாது; வெட்கக்கேடாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடார்பாக இன்று சனிக்கிழமை தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழத்தின் தலைநகராக இயங்கிய கிளிநொச்சியை சிங்களப்படை கைப்பற்றிவிட்டதென ராஜபக்சவும், தமிழின துரோகக் கும்பலும் கும்மாளம் அடிக்கின்றனர்.

மேலும்


அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்: அமெரிக்கா

03.01.2009

தமிழர்களின் நியாயப்பூர்வமான கோரிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் கோடன் டக்யுட், கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்துரைக்கையிலேயே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். 

மேலும்


கிளிநொச்சி பிடிபட்டது-ராஜபக்சே!!

02.01.2009

கொழும்பு: புலிகளின் தலைமையகமான கிளிநொச்சி முழுவதுமாக தங்கள் வசம் வந்துவிட்டதாக இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல மாத கடும் போருக்குப் பின் கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் இன்று காலை தெரிவித்தது.

இதை இந்திய தொலைக்காட்சியிடமும் அந் நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலாளரான கோதபய ராஜபக்சே உறுதி செய்தார். கிளிநொச்சியை எல்லா பக்கங்களில் இருந்தும் ராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

முழுமையாக பிடிபட்டது.. ராஜபக்ஷே:


பரந்தன் மறறும் இரணைமடு பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவிப்பு

02.01.2009

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரின் தெற்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ள விடுதலைப் புலிகளின் இரண்டு முக்கிய தளங்களை இராணுவத்தினர் வியாழனன்று கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

கிளநொச்சி நகருக்குத் தெற்கே ஏ 9 வீதியில் உள்ள இரணைமடுச் சந்தியையும், கிளிநொச்சி நகருக்கு வடக்கே நாலரை கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பரந்தன் சந்தியையுமே அரச படைகள் இவ்வாறு கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவி்த்திருக்கின்றது.

மேலும்



ஈழம் 2008 அகவி