ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்: பழைய ஆவணங்கள் பேசுகின்றன.

28.01.2009

தமிழன் எக்ஸ்பிரஸ் வார ஏடு நவம்பர் 19, 1997-ல் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.... என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு 2009 வரை விடை கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது.

அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.

மேலும்


இறுதிப் போர் யாருக்கு சாதகம்?

18.01.2009

முல்லைத்தீவில் இறுதிப்போரில் படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவைச் சுற்றி சகல முனைகளிலும் குவிக்கப்பட்டுள்ள படையினர் ஆங்காங்கே பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் கடும் பதில் தாக்குதல்களால் பின்னடைவையும் சந்திக்கின்றனர்.

தங்களது சகல வளங்களையும் திரட்டி முல்லைத்தீவை குறிவைத்துள்ள படையினருக்கு புலிகளின் பதில் நடவடிக்கைகள் குறித்தும் பலத்த சந்தேகங்கள் உள்ளன. இதுவரை காலமும் பின்வாங்கிய புலிகளின் பதில் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்பது குறித்தும் படையினர் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.


மேலும்


முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமையலாம்!

15.01.2009

வன்னிப் போர்முனை விரித்த வலை புதியது,புரியாதது! பல எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்களின் தலையில் ஏறித் தாண்டவமாடிக் கொண்டது இந்தப் போர்முனை. பலமான ஒரு மையப்பகுதியாக விளங்கியது கிளிநொச்சி.

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியின் முக்கிய தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான காரணம் என்ன?


மேலும்


கிளிநொச்சியின் வீழ்ச்சி நிரந்தரமானதா? - வன்னியன்

05.01.2009

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது.

விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை செப்பனிட்டு நேர்ப்படுத்தி விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று விடுதலைப் புலிகள் இயக்கம் அன்றைய காலகட்டத்தின் நெருக்கடிகளை எல்லாம் சாதுரியமாக தீர்வுகண்டு முதலாம் கட்ட ஈழப்போரின் முடிவில் யாழ். குடாநாட்டையும் கிளிநொச்சி நகரப்பகுதி தவிர்ந்த மாவட்டத்தின் பெரும்பகுதியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

மேலும்


ஒருபோதும் முடிவுக்கு வராத அச்சத்துடன் வாழ்க்கை: சொந்த மண்ணிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் தமிழர்

01.01.2009

"நாய்களைப் போன்று எங்களைச் சுட முடியும், தமிழர்களைப் பற்றி எவரும் கவலைப்படமாட்டார்கள்"  இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து பீதியுடனும் சொந்த மண்ணிலிருந்து தப்பியோடுபவர்களாகவுமே உள்ளார்கள் என்று இலங்கைக்கு அண்மையில் வந்து விட்டு சென்றுள்ள இந்தியாவிலிருந்து வெளியாகும் "வீக்' சஞ்சிகையின் நிருபர் கவிதா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும்


ஈழம் 2008 அகவி