பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் வெளியிட்ட கருத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது!

24.01.2009

ஈழத்தமிழர்களின் நிலை தொடர்பாக பிரதமரின் கருத்துக்கு முரண்பாடான பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் வெளியிட்ட கருத்துள்ளதாக பிரித்தானிய தமிழர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கின்றது!

பிரித்தானிய வெளிவிவகார மற்றும், பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் 21-01-2009ஆம் திகதியிட்டு வெளியிட்ட இந்த அறிக்கையில் ஸ்ரீலங்காஅரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழின படுகொலை தொடர்பான கண்டனம் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த அறிக்கை பிரித்தானிய பிரதமரின் நிலைப்பாட்டுடன் முற்றிலும் முரண்படுவதாகஉள்ளதை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

ஜனவரி14ஆம் தகதி இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது பதிலளித்த பிரதமர்"ஸ்ரீலங்காவில் இடம்பெறும் மோசமான வன்முறைகள் தொடர்பாக (திரு. வாஸ்) அவர்கள் தெரிவித்த கருத்துடன் நான் உடன்படுகின்றேன். அத்துடன் யுத்த நிறுத்தத்தின் தேவைபற்றிய அவரது கருத்துடனும் நான் உடன்படுகின்றேன். ஜனாதிபதி சாக்ரோயுடனும் சான்சிலர் மேக்லுடனும் பேசும் போது இதுகுறித்தும் பேசவுள்ளேன்"எனத் தெரிவித்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக வெளிவிவகார அமைச்சின் கருத்து உள்ளது.

வெளிவிகார அமைச்சின் அறிக்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பான கோரிக்கை முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளது. ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் " அவர்கள் கடந்த பத்துநாட்களுக்கு மேலாக சர்வதேச உதவிகளை பெறுவதில் இருந்து முற்றாகதுண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள்.... பாதிக்கபட்ட பிரதேசங்களில் உள்ளபொதுமக்களுக்கு தேவையான நிவாரண மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய ஏதுவாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்" எனத் தெரவிக்கப்பட்ட கருத்துடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின்கருத்து முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.

‘ஸ்ரீலங்காவில் இருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்தல்' என்ற பதத்தை பாவித்து வன்னியில் ஏற்பட்டிருக்கும் பாரிய மனித அவலம் பற்றிய உண்மை நிலவரம் மூடிமறைக்கப்பட்டிருப்பதோடு சில மேற்குலக நாடுகள் ஸ்ரீலங்கா அரசின் இத்தகைய நடவடிக்கைளுக்க இராஜதந்திர பாதுகாப்பு வழங்க முற்படுகின்றன என பிரித்தானியதமிழர் ஒன்றியத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் பதவியேற்ற சிலநாட்களில் வெளியாகியிருப்பது தவறான வழிகாட்டுதலை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்ட ஒன்றென கருத தோன்றுகின்றது.

பிரித்தானிய தமிழர் பேரவை பிரித்தானியாவில் உள்ள 2 இலட்சத்துக்கும் மேற்பட்டதமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு குடைஅமைப்பு என்ற வகையில் வெளிவிவகார அமைச்சின் இந்த அறிக்கை தொடர்பாக எமதுஅமைப்பு மிகுந்த கவனம் செலுத்துகின்றது. வெளிவிவகார அமைச்சின் இந்தநடவடிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதுடன் இந்த விடயம் தொடர்பாக பிரித்தானிய அரசின் நடுநிலைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது.

வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் விடுதலைப்புலிகளுக்கு மக்கள் ஆணைஇல்லை என்ற கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது.

2004ஆம் இலங்கையில் நடைபெற்றபொதுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றகொள்கையை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து போட்டியிட்ட தமிழ் தேசியகூட்டமைப்பு பெரு வெற்றியீடடியிருந்ததை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்குபிரித்தானிய தமிழர்கள் தாழ்மையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றனர். அத்துடன் 1977ஆம்ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தை (தமிழீம) மீள உருவாக்கமக்கள் ஆணை வழங்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தவறான போர்வைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அடக்குமுறை அரசுகளுக்கு உதவும் வகையிலான அணுகுமுறையை தவிர்ததுக்கொள்ள வேண்டும் என பிரித்தானிய தமிழர்களான நாம் இந்த அரசிடம் வேண்டிக்கொள்கின்றோம். ஸ்ரீலங்கா அரச படைகளால் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களினால் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் தேவிபுரம், வள்ளிபுனம் ஆகிய இடங்களில் 66 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா அரசின் அரச பயங்கரவாதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நேற்று பாதுகாப்புப் பிரதேசத்தில் அமைந்திருந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 5 அப்பாவிப் பொது நோயாளர்களைக் கொன்றிருப்பதோடு 15 நோயாளர்களை காயப்படுத்தியுமுள்ளனர். அத்துடன் அங்கிருந்த மிக முக்கியமான உயிர்காப்புச் சாதனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

வன்னி மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போரை நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க ஸ்ரீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவையானது கோருகின்றது. அத்துடன் பிரித்தானிய வெளிவிவகாரஅமைச்சு தவறான ஆலோசனைகளின் அடிப்படையில் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும் வேண்டுகின்றோம்.

முகப்பு

ஈழம் 2008 அகவி