புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவான போர்க் கருவிகள் புலிகள் வசம்! 

07.02.2009

புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மற்றும் மன்னங்கண்டல் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினரரின் ஊடறுப்பு அதிரடித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான படையப் பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:

கடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாங்கண்டல் பகுதில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களுகம் குவிக்கப்பட்டிருந்தன. 

1ம் நாள் தொடக்கும் 3ம் நாள் வரை இடம்பெற்ற புலிகளின் ஊடறுப்பு தாக்குதல்கள் மற்றும் கரும்புலி வீரர்களின் தாக்குதல்களில் 1000க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். 

யுத்த டாங்கிகள், யுத்த துருப்புக் காவிகள், கவச வாகனங்கள், ட்றக் வண்டிகள், உழுபொறிகள் உட்பட சிறீலங்கா படைகளின் பதினைந்து படைய ஊர்திகள், தமிழீழ       விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டிருப்பதோடு, பெரும்      தொகையான போர்க் கருவிகள், புலிகள் வசம் வீழ்ந்துள்ளன.


ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்

81 மி.மீ மற்றும் 82 மி.மீ மோட்டார்கள் - 20
81 மி.மீ மற்றும் 82 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 10,000 வரையில்
60 மி.மீ மோட்டார்கள்
60 மி.மீ எறிகணைகள்
துப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்
ஒரு மில்லியனுக்கு அதிகமான ரவைகள்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள்
ஆர்.பி.ஜி உந்துகணைகள் 

எனப் பெருந்தொகைப் படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.


இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவர் இணைந்து நிற்கும் புகைப் படங்கள் ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்துள்ளன.

புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலையடுத்து படையினர் வசம் இருந்து 3.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு விடுதலை புலிகளால் விடுவிக்கப்பட்டுள்ளன. புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 59வது படைப் பிரிவு அழிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் படையினருக்கான படையப் பொருள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட 20 வாகனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேடியழிக்கும் பிரிவினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
 
முகப்பு


ஈழம் 2008 அகவி