ஏது சுதந்திரம் தேடுகிறாய்...

சுட்டெரிக்கும் சூரியனின்
கோபம் தீர்க்க அந்திவானம் கீழிறங்கி
அஸ்தமனமாகி இருளுக்கு ஒளியேற்ற
நிலா மேனிமெழுகி மெல்லமெல்ல
முத்தமிடுகிறான் பூமியை.
சந்தமெங்கும் சரணம் பாடி
ஊர் வருடிய குருவிகளெல்லாம்
மெல்லமெல்ல மேலெழுந்து
வட்டமிடிகின்றன வானை.
உள்ளமெல்லாம் இன்பமாக
பூஜை அறை கூட்டிச்செல்லும்
ஊர் காக்கும் கோவில் மணிஓசை...
காலை புலருமென மெல்லமெல்ல
கண்ணயர்ந்து லயங்களெல்லாம்
ஊர்வாயை மூடிக்கொண்டது.
மாடுமந்தை மேய்ப்பான் பட்டியிலே!
கூலிக்காய் மாரடிப்பவன் பரணிலும்
தோணிவீட்டிலும் துயிலுகிறான்.
விழித்திருந்து விழிநோகி
காத்திருக்கும் மனையாழும்
வந்தவுடன் வயிற்றுப்பசியாறும்
நினைவெல்லாம் ரணமாக
கரைசேரும் கனவானும்
நினைக்கவில்லை நடக்குமென்று.
காத்தாடி போலவந்து காட்டிடையே
முத்தமிட்டு காலையிலே
கதறவிட்டு சென்றுவிட்டான்.
பகுத்தறியும் ஊரில் பகுத்தறியா
பண்ணியவன் ஊரெல்லாம் ஊமையாக்கி
உயிரெல்லாம் வேட்டையாடி
சுடுகாடைவிட்டு சுதந்திரம் தேடுகிறான்.
பகுத்தறியாப் பறவைகளும்
விலங்குகளும் பலிக்கடாவாகி
ஒலியோளி பட்டு நீர்பட்டு உல்லாசபட்ட
மரஞ்செடிகளெல்லாம் பாளாக்கி
சென்றவரெல்லாம் மாற்றான்
விருந்துக்கு உபசாரமாகிறார்கள்.
பகுத்தறியா எதிரிக்கு பகுத்தறிவான் என்ன
பகுத்தரியா மரங்களும் விலங்கும் பறவையும்
உனக்கேது குற்றம்புரிந்தன கொன்றுவிட்டு
சுதந்திரம் தேடுகிறாய்.

கவிதை         முகப்பு

ஈழம் 2008 அகவி