அன்புள்ள அம்மாவுக்கு!

அன்புள்ள அம்மாவுக்கு!
ஆசை மகள் எழுதிக்கொள்வது
நீ நலமாயிருக்கமாட்டாய்
நானறிவேன்.
உன் நலமறிந்து நானும்
நலமாயிருக்க அந்த
இறைவனை வேண்டுகின்றேன்.
தவமிருந்து பெற்றெடுத்தவன்
சென்றுவிட்டானே என்ற
கவலை உனக்கிருக்கும்
என்னையும் சேர்த்துக்கொள்.
அஸ்த்தி கரைத்துவிட்டாய
அவர் ஆத்மா சாந்தியடைய?
தெருவோரம் அப்பம் விற்று
அனுப்பும் பணம் போது
என் படிப்புக்கு.
ஊர்வீட்டார் சட்டி, பானை கழுவிய
சம்பளம் வாங்கிவிட்டாயா
தம்பியின் செலவுக்கு.
வாடிவதங்கிய முகத்துடன்
நீ அனுப்பிய புகைப்படம்
பார்த்து பதைபதைத்துப்போனேன்.
தம்பியும் அப்படித்தானா?
இப்பவும் என்ன
மாடுகளுடன் பட்டியில்தானா?
பரவாயில்லை கஷ்ரமறியாது
நன்றாக கற்க சொல்.
தோழர்களெல்லாம் சுகமா?
உன் முகம் பார்க்க வருவதுன்டா?
கப்பலேறூம் காலம் வந்தால்
மீண்டுமுன்னை சந்திப்பேன்...
நன்நாள் வரும் நமக்கென
கடவுளை வேண்டிக்கொள்.
என் மடல் முடிக்கிறேன்.
என்றும் உன் பதில்
கண்டு தொடருவேன்...
முகவரியை தொலைத்திடாதே!
பாசமுள்ள தமிழினி.


கவிதை            முகப்பு

ஈழம் 2008 அகவி