முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை 7 தடவைகள் குண்டுத்தாக்குதல்: 12 பேர் காயம்

13.01.2009

முல்லைத்தீவு பகுதியில் சிறிலங்கா வான்படை இன்று ஏழு தடவைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் இருவர் காயமடைந்துள்ளனர். 12 வீடுகள் சேதமாகின. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் 18 குண்டுகளை வீசியுள்ளன.

இதில்

அனுராச்

சிவராசா

தமிழ்ச்செல்வன்

கிரிதா

றமா

யோகராசா

பூபதி

கோபாலன்

சந்திரன்

டெனாட்

ஆகியோரின் வீடுகளும் அலெக்ஸ் முன்பள்ளி, செல்வபுரம் யூதாதேயு கோவல், அருட்சகோதரிகள் இல்லம், முல்லைத்தீவு மகா வித்தியாலயம், புனித இராயப்பர் ஆலயம், முல்லை நகர் வணிக நிலையங்கள் ஆகியன சேதமடைந்துள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி விசுவமடு தொட்டியடி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று மாலை 6:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

பெருமளவில் இடம்பெயர்ந்த மக்கள் இப்பகுதியில் குடியமர்ந்துள்ள நிலையில் இத்தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர்.


முகப்பு


ஈழம் 2008 அகவி